×

எடப்பாடி பற்றி கேள்வி ஆகஸ்டில் இருந்து பேசறேன்: அண்ணாமலை மழுப்பல்

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பாஜ முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்ததும், அண்ணாமலையிடம் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என எடப்பாடி பழனிசாமி பேசியிருப்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “எல்லோரும் நல்லா இருக்கீங்களா. உங்களை தான் அதிகமா மிஸ் பண்றேன். ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து ரெகுலராக பேச ஆரம்பிக்கிறேன். கோவிச்சுக்காதீங்க. எல்லோரும் டீ சாப்பிட்டு போங்க” என்று மழுப்பலாக பதில் அளித்தவாறு அங்கிருந்து நடையை கட்டினார். அவர் சமீப நாட்களில் பத்திரிகையாளர்களை சந்திப்பதை தவிர்த்து வருகிறார்.

The post எடப்பாடி பற்றி கேள்வி ஆகஸ்டில் இருந்து பேசறேன்: அண்ணாமலை மழுப்பல் appeared first on Dinakaran.

Tags : Eadapadi ,Annamalai ,KOWAI ,PRESIDENT ,BAJA ANNAMALAI ,KOWAI GANDHIPURAM ,Edapadi Palanisamy ,Annamalai Mabapal ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி