×

என்ன செய்யப் போகிறேன்? மதுரைல செப்.4ல சொல்றேன்: ஓபிஎஸ் சஸ்பென்ஸ்

சென்னை: அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் நேற்று சென்னை வேப்பேரியில் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தினார். இதில், ‘அதிமுகவை மீட்டெடுப்பதற்கான சட்ட போராட்டம் தொடரும். எதிர்காலத்தில் நம்முடைய நோக்கத்தை வென்றெடுப்போம். மக்களின் நன்மதிப்பை பெற்றவர்கள் மட்டுமே முதலமைச்சராக முடியும். நான் எடுத்துள்ள சில முடிவுகளை வெளியே சொல்ல முடியாது. அது என்ன என்பது குறித்து உங்களுக்கு விரைவில் அறிவிப்பேன்’’ என்று ஓ.பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரு அணியில் இணைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அதிமுகவின் அனைத்து தொண்டர்கள் இணைவதற்கு எடப்பாடி பழனிசாமி ஒப்புக் கொண்டால் எந்த நிபந்தனையும் விதிக்காமல் நான் இணைவேன். எனக்கு எந்த பதவியும் தேவையில்லை. என்னுடன் இருப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் பதவி வாங்கிக் கொடுக்கும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. மதுரையில் வரும் செப்டம்பர் 4ம் தேதி எனது தலைமையில் மாநாடு நடைபெறும். மாநாட்டுக்கு சசிகலா மற்றும் டி.டி.வி.தினகரனுக்கு அழைப்பு விடுக்கப்படும். என்ன முடிவு எடுக்கப் போகிறேன் என்பதை அந்த மாநாட்டில் சொல்வேன்” என்றார்.

The post என்ன செய்யப் போகிறேன்? மதுரைல செப்.4ல சொல்றேன்: ஓபிஎஸ் சஸ்பென்ஸ் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Chennai ,Chennai Vapery ,Paneer Selvam ,Maduraila ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி