மீண்டும் ஜோடி சேர்ந்த ஜெயம் ரவி, நயன்தாரா

திரைக்கு வந்த ‘வாமனன், ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ ஆகிய படங்களை இயக்கியவர், ஐ.அஹ்மத். தற்போது அவரது இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்துள்ள படம் ‘இறைவன்’. ஏற்கனவே ‘தனி ஒருவன்’ படத்தில் இணைந்து நடித்திருந்த அவர்கள், இப்படத்தின் மூலம் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் முடிவடைந்தது. இந்நிலையில், இப்படம் வரும் ஆகஸ்ட் 25ம் தேதி திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

The post மீண்டும் ஜோடி சேர்ந்த ஜெயம் ரவி, நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: