×

தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நாளை நடக்கிறது: செல்வப்பெருந்தகை பங்கேற்பு

சென்னை: தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா, இந்திய அரசியல் அமைப்பை காப்போம் மற்றும் நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்குவது என முப்பெரும் விழா சென்னை சைதாப்பேட்டை வேளாங்கண்ணி கல்லூரியில் நாளை மாலை நடக்கிறது. விழாவுக்கு, தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் எம்.ஏ.முத்தழகன் தலைமை வகிக்கிறார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு, நிர்வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

விழாவில், அகில இந்திய காங்கிரஸ் எஸ்சி பிரிவு தலைவர் ராஜேந்திரபால் கவுதம், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் ஹெக்டே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, கிராம காங்கிரஸ் கமிட்டி சீரமைப்பு குழு தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பிக்கள் விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ், எம்.எல்.ஏ.க்கள் ரூபி மனோகரன், அசன் மவுலானா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், ராம் மோகன், கே.விஜயன், டி.செல்வம், இல.பாஸ்கரன், தணிகாசலம், அருள்பெத்தையா, இமயாகக்கன், வசந்த ராஜ், மற்றும் ஏ.எஸ்.ஜார்ஜ், சுசிலா கோபாலகிருஷ்ணன், ஈகை. கோகுலகிருஷ்ணன், செஞ்சி முத்தமிழ் மன்னன், கிண்டி கணேஷ், திநகர் ஏழுமலை, வடபழனி பாபு, ராஜமாணிக்கம், ராஜபாண்டி, தலைமை நிலையச் செயலாளர்கள் மன்சூர் அலி, இல.பூபதி, பி.வள்ளி உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். சிலம்பன், ராஜ்கமல், ஆர்.கே.ராஜேஷ் ஆகியோர் நன்றி கூறுகின்றனர்.

 

The post தென்சென்னை மத்திய மாவட்ட காங்கிரஸ் சார்பில் காமராஜர் பிறந்தநாள் உள்ளிட்ட முப்பெரும் விழா நாளை நடக்கிறது: செல்வப்பெருந்தகை பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Central District Congress of Tensennai ,Chennai ,Kamraj ,Central District Congress of Tensenna ,Velangani College ,Saithappetta Velangani College ,Tensennai ,Cameraman ,Dinakaran ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...