முதன்முதலாக மிகப்பெரிய கட்-அவுட்

இந்திய சுதந்திரப் போராட்டத்துக்காக அரும்பாடுபட்ட வீரபாண்டிய கட்டபொம்மன், சுப்பிரமணிய பாரதியார், வ.உ.சிதம்பரம் பிள்ளை, பகத்சிங், திருப்பூர் குமரன் போன்றவர்களின் கதாபாத்திரங்களில் நடித்த ஒரே நடிகர், சிவாஜி கணேசன் மட்டுமே. தமிழ்ப் படவுலகில் முதன்முதலாக மிகப்பெரிய கட்-அவுட் வைக்கப்பட்டது சிவாஜி கணேசன் ஒருவருக்கு மட்டும்தான். கடந்த 1957ல் வெளியான அப்படம், ‘வணங்காமுடி’. சிவாஜி கணேசன் நடித்த மொத்த படங்களின் எண்ணிக்கை 301.

தமிழில் 270, தெலுங்கில் 9, இந்தியில் 2, மலையாளத்தில் 1 மற்றும் கவுரவ தோற்றத்தில் 19 படங்களாகும். சிவாஜி கணேசன் முதன்முதலில் பெண் வேடத்தில் நடித்தது எப்போது தெரியுமா, மேடை நாடகம் ஒன்றில், உப்பரிகையில் நின்றபடி ராமனைப் பார்க்கும் சீதை வேடம் அது. ‘ஸ்டேனிஸ் லா வோஸ்கி தியரி’ நடிப்புக்கல்லூரி மாணவர்களுக்கான பாடப்புத்தகத்தில், 64 வகையான முகபாவங்களைப் பிரதிபலிக்கும் திறமை பெற்றவர் என்று குறிப்பிட்டு, சிவாஜி கணேசன் போட்டோக்கள் இடம்பெற்றுள்ளன.

The post முதன்முதலாக மிகப்பெரிய கட்-அவுட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: