×

மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்வெளியிட்ட அறிக்கை: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நலத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை, சிறுபான்மையினர் நலத் துறை ஆகியவற்றின் கீழ் மொத்தம் 2,739 விடுதிகள் இனி “சமூகநீதி விடுதிகள்” என அழைக்கப்படும் என அறிவித்துள்ள முதல்வர், “சமூக ஏற்றத்தாழ்வுகளை உடைத்து, சமநீதியை வளர்ப்பதற்காக பள்ளி கல்லூரிகளின் அரசு விடுதிகளின் பெயர் சமூக நீதி விடுதிகள் என மாற்றப்படும்” என்று அறிவித்திருக்கிறார். பெயர்களை மட்டும் மாற்றுவதால் பெரிய மாற்றம் ஏதும் நடந்து விடாது. தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே மதுப்பழக்கம், போதைப் பழக்கம் அதிகரித்து வருகின்றன. அவற்றை முற்றிலுமாக ஒழிப்பதற்கு அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.

The post மாணவர்களிடையே போதைப் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க ராமதாஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Ramadas ,Chennai ,Palamaka ,Backward ,Most ,Seermarabiner Welfare Department ,Aditravidar and Tribal Welfare Department ,Minority Welfare Department ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி