×

திமுக ஆட்சியில் விகிதாச்சாரம் குறைவுதான் அதிமுக ஆட்சியில் கஞ்சா, கொலை வழக்குகளே பதிவாகவில்லையா? செல்வப்பெருந்தகை கேள்வி

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் சென்னை விமான நிலையத்தில் செல்வப்பெருந்தகை அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் இப்போதுதான் கஞ்சா மற்றும் கொலைகள் நடப்பது போல் பேசுகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் கஞ்சா வழக்கே தமிழ்நாட்டில் இல்லையா, கொலைகள் எதுவுமே நடக்கவில்லையா, அதிமுக ஆட்சிக்காலத்தில் இருந்ததை விட குற்றங்களின் விகிதாச்சாரம் இப்போது குறைவுதான். ஆனால், அதே நேரத்தில் குற்றங்கள் குறைவாக நடந்தது என்று விட்டு போய்விட முடியாது. இதை கட்டுப்படுத்த தீவிரமாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

பாஜவுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா, நாங்கள் கூட்டணி வைப்பதில் என்ன தவறு என்று கேட்கிறார். திமுக குறைந்தபட்ச செயல் திட்டம் என்று ஒரு நிபந்தனையுடன் கூட்டணி வைத்தது. அதிமுக என்ன செயல் திட்டத்துடன் கூட்டணி வைத்து உள்ளீர்கள். நீட் ரத்து, பள்ளிக்கல்வி துறைக்கு நிறுத்தி வைத்த நிதியை வழங்க வேண்டும். கீழடி குறித்த செயல் திட்டம் என்ற நிபந்தனைகள் ஏதாவது வைத்தீர்களா? நீட் தேர்வு எதிர்ப்பு தீர்மானம் சட்டத்தை, முதல்வர் கொண்டு வந்தார். ஆனால் அதை நடைமுறைப்படுத்த விட மாட்டேன் என்று கூறும், பாஜவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, தமிழ்நாடு மாணவர்களுக்கு எதிராக இருப்பவர்கள் தான், அதற்கு பொறுப்பு. இப்போது நீட் தேர்வு பிரச்னையில் நீதிமன்றத்தை அணுகப் போகின்றனர்.

The post திமுக ஆட்சியில் விகிதாச்சாரம் குறைவுதான் அதிமுக ஆட்சியில் கஞ்சா, கொலை வழக்குகளே பதிவாகவில்லையா? செல்வப்பெருந்தகை கேள்வி appeared first on Dinakaran.

Tags : DMK ,AIADMK ,Selvaperundhagai ,Chennai ,Tamil Nadu Congress Party ,Chennai airport ,Tamil Nadu ,AIADMK… ,Dinakaran ,
× RELATED அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிபெறும்: தஞ்சையில் டி.டி.வி. தினகரன் பேட்டி