×

பெட்ரூம் சீனில் நடித்த தமன்னா: ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையான தமன்னா, இந்தியிலும் பிசியாக நடிக்கிறார். இப்போது இந்தியில் ‘லஸ்ட் ஸ்டோரிஸ் 2’ வெப்தொடரில் நடித்திருக்கிறார். சமீபத்தில் தமன்னா தன்னுடன் நடித்த இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் அவர் தன்னை நன்றாக பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து தமன்னா-விஜய் வர்மா திருமணம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தமன்னா நடித்த படுக்கை அறை காட்சி வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது காதலை வெளிப்படையாக அறிவித்த ஒரு சில நாட்களில் இந்த வீடியோ வெளிவந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து விசாரித்தபோது, இது லஸ்ட் ஸ்டோரிஸ் 2 வெப்தொடரில் ஒரு காட்சியில் தமன்னா இப்படி நடித்திருப்பது தெரியவந்தது. இதில் நடிகர் ஒருவருடன் படுக்கை அறையில் நிர்வாண நிலையில் இருப்பது போல் தமன்னா நடித்துள்ளார்.

இதை பார்த்த நெட்டிசன்கள், தமன்னாவா இது என அதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து தமன்னாவிடம் கேட்டபோது, ‘கதைக்கு தேவையென்பதால் இப்படி நடித்தேன். ஆனால் அதில் ஆபாசம் இருக்காது’ என்றார். லஸ்ட் ஸ்டோரிஸ் முதல் பாகத்திலும் செக்ஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற்றது.

The post பெட்ரூம் சீனில் நடித்த தமன்னா: ரசிகர்கள் அதிர்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Tamannaah ,Chennai ,Vijay Varma ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தமன்னாவுடன் திருமணம் எப்போது? பதிலளிக்க விஜய் வர்மா மறுப்பு