டிரான்ஸ்பார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட் – திரைவிமர்சனம்

பீஸ்ட் வார்ஸ் கதைகளை தழுவி உருவானதுதான் டிரான்ஸ்பார்மர்ஸ் படங்கள். அவர் உருவாக்கிய ‘ஹஸ்ப்ரோஸ் பொம்மை வரிசைகளை அடிப்படையாகக் கொண்டு, கேரக்டர்கள் உருவாக்கப்பட்டு அதற்கென தனி கதையும், திரைக்கதையும் அமைத்து நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் இந்த படங்கள் உருவாக்கப்படுகிறது. வாகனங்கள் ராட்சத உருவம் எடுப்பதுதான் இந்த கேரக்டர்களின் சிறப்பு. இதுவரை 6 பாகங்கள் வெளியாகியுள்ளன. இவற்றில் 5 பாகங்களை’மைக்கேல் பே இயக்கியுள்ளார். 2018இல் வெளிவந்த 6வது பாகமான ‘டிரான்ஸ்பார்மர்: பம்பல் பீ’ படத்தை மைக்கேல் பே தயாரிக்க ட்ராவிஸ் நைட் இயக்கினார். தற்போது வெளிவந்துள்ள ‘ட்ரான்ஸ்பார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட்ஸ்’ 7 ஆவது பாகம். இது 6 வது பாகத்தின் நேரடி தொடர்ச்சி. ஸ்டீவன் கேபிள் இயக்கி உள்ளார்.

உலகத்தை கைப்பற்ற வேற்று கிரகத்தில் இருந்து வந்த டிரான்ஸ்பார்மர்கள் கடந்த பாகத்தில் துரத்தி அடிக்கப்படுகிறார்கள். அவர்களில் ஒரு சிலர் பூமியிலேயே தங்கி விடுகிறார்கள். இன்னொரு கிரகத்தில் உள்ள சக்தி வாய்ந்த ஏலியன்ஸ் டிரான்ஸ்பார்மர்கள் உலகத்துக்கே நாங்கள்தான் அத்தாரிட்டி என்று கூறி எல்லா கிரகங்கள் மீதும் படையெடுக்கிறார்கள். உலகத்தை கைப்பற்ற அவர்களுக்கு தேவையான ஒரு சாவி பூமியில் இருக்கிறது. அதனை இரண்டாக பிரித்து ஒரு மியூசியத்தில் உள்ள பொம்மை ஒன்றில் ஒரு சாவியும், மலைவாழ் மக்கள் கையில் ஒரு சாவியும் இருக்கிறது.

1994ம் ஆண்டு நடக்கும் இந்த கதையில் மியூசியத்தில் உள்ள வித்தியாசமான காகத்தின் பொம்மையை பார்க்கும் கலைப்பொருள் ஆராய்ச்சியாளர் எலீனா (டொமினிக் பிஷ்பேக்) அதில் இருக்கும் சாவியையும், ரகசிய குறிப்பையும் கண்டுபிடிக்கிறார். சாவியின் ஒரு பகுதி ஆக்டிவேட் ஆகவும் உலகைக் கைப்பற்ற நினைக்கும் ஏலியன்களுக்குத் தெரிந்துவிடுகிறது. படத்தின் நாயகன் நோவா(ஆன்டனி ராமோஸ்) கார் திருடச் செல்கிறார். அந்த கார் ஒரு டிரான்ஸ்பார்மர் ஏலியன். சாவி வெளியில் வந்ததும் ஏலியன்ஸ் டிரான்ஸ்பார்மர்கள் விழித்துக் கொள்கிறார்கள். படத்தின் நாயகன், நாயகி உதவியுடன் பூமியில் உள்ள டிரான்ஸ்பார்மர்கள் , உலகைக் காப்பாற்றி டிரான்ஸ்பார்மர்களை விரட்டி அடிக்கிறார்கள் என்பதுதான் கதை. 8வது பாகத்திற்கும் லீட் கொடுத்து முடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் கதை என்று பெரிதாக இல்லை. தீய சக்திக்கும், நல்ல சக்திக்குமான போராட்டம்தான் கதை. அதற்கு ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்து அதற்கேற்ப காட்சிகளை பிரமாண்ட உருவாக்கி பார்வையாளர்களை மிரட்டுகிறார்கள். இடையில் கொஞ்சம் சென்டிமெண்ட், கொஞ்சம் காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள். மிஷின்களின் படம் என்பதற்காக வறட்சி காட்டாமல் அழகான மலைகள், குறிப்பாக கிளிமஞ்சாரோவை இதுவரை யாரும் காட்டாத விதத்தில் காட்சி அசத்தி இருக்கிறார்கள். ஒளிப்பதிவாளர் எரிக்கு செட்ஜக் கடுமையாக உழைத்திருக்கிறார். கதையில் பெரிய திருப்பமோ, சுவாரஸ்ய மாற்றங்களோ இல்லாதால் சில நேரங்களில் வீடியோ கேம் பார்ப்பது போன்று இருக்கும். இருந்தாலும் 3டியில் பார்க்கும்போது முழுமையான காட்சி அனுபவத்தை உணரமுடியும். டிரான்ஸ்பார்மர் கோடை விடுமுறை காலத்தில் வந்திருக்கும் டைம் பாஸ் படம்.

The post டிரான்ஸ்பார்மர்ஸ்: ரைஸ் ஆஃப் தி பீஸ்ட் – திரைவிமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: