×

விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு

‘பாகுபலி’ எடிட்டர் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவ் உறவினர் கார்த்திக் அத்வைத் தமிழில் தயாரித்து இயக்கியுள்ள படம், ‘பாயும் ஒளி நீ எனக்கு’. விக்ரம் பிரபு, வாணி போஜன், கன்னட நடிகர் தனஞ்ஜெயா, விவேக் பிரசன்னா, வேல.ராமமூர்த்தி, ‘திருடா திருடா’ ஆனந்த் நடித்துள்ளனர். தெலுங்கில் சிரஞ்சீவி, தமன்னா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘போலா சங்கர்’ படத்தின் இசை அமைப்பாளர் சாகர், இப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். இவர், இசை அமைப்பாளர் மணிசர்மா மகன். தினேஷ் காசி சண்டைப் பயிற்சியில் 9 சண்டைக்காட்சிகள் இடம்பெறுகிறது.

ஆக்‌ஷன் திரில்லர் கதை கொண்ட இப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. வரும் 23ம் தேதி திரைக்கு வருகிறது. கார்த்திக் அத்வைத் கூறுகையில், ‘பொது மனிதனாக இருக்கும் விக்ரம் பிரபு, எல்லா ரூல்சையும் தவறாமல் மதிப்பவர். அவருக்கும், தனஞ்ஜெயாவுக்கும் ஏற்படும் பிரச்னைகள் என்ன? அது யாரால், எப்படி ஏற்படுகிறது என்பது கதை. பொதுவாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்துக்காக விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு, தனது செயலில் வெற்றிபெற்றாரா என்பதை படம் சொல்கிறது. தவிர, மீண்டும் விக்ரம் பிரபுவுடன் ஒரு படத்தில் இணைகிறேன். அடுத்து கன்னடத்தில் சிவராஜ் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறேன்’ என்றார்.

The post விஸ்வரூபம் எடுக்கும் விக்ரம் பிரபு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vikram Prabhu ,Visvarupam ,Kotagiri Venkateswara Rao ,Karthik Advait ,Vani Bhojan ,Dhananjaya ,Vivek Prasanna ,Vela.Ramamoorthy ,Anand ,Kollywood Images ,
× RELATED ரெய்டு விமர்சனம்