×

மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது

கொல்கத்தா: சான் பிரான்சிஸ்கோவில் இருந்து கொல்கத்தா வழியாக மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது ஏற்பட்டது. விமானத்தின் 2 எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். ஏர் இந்தியா விமானத்தில் பழுது ஏற்பட்ட நிலையில் திட்டமிட்ட நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தை அடைந்தது. திட்டமிட்ட நேரமான நள்ளிரவு 12.45க்கு கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் தரையிறக்கப்பட்டது. எஞ்சின் பழுதால் அதிகாலை 5.20 மணி அளவில் பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து இறங்குமாறு விமானி அறிவுறுத்தினார்.

The post மும்பை வந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சினில் பழுது appeared first on Dinakaran.

Tags : Air India ,Mumbai ,Kolkata ,San Francisco ,Dinakaran ,
× RELATED எல்லாமே பா.ஜ கட்டுப்பாட்டில்...