சென்னை: 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார். மேலும் 10 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜூன் 15, 16, 18, 19 தேதிகளில் அன்புமணி சந்திக்கவுள்ளார். அந்த சந்திப்பில் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. ஜூன் 15, காலை திருவள்ளூர், மாலை செங்கல்பட்டு மாவட்டத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும். ஜூன் 16, காலை காஞ்சிபுரம் மாவட்டம் மாலை இராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். ஜூன் 17, காலை வேலூர் மாவட்டம் மாலை திருப்பத்தூர் மாவட்டத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post 10 மாவட்டங்களில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அன்புமணி அறிவிப்பு appeared first on Dinakaran.