×

ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்ற எம்.எஸ். தோனிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்ற எம்.எஸ். தோனிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; ஐசிசி Hall of Fame-ல் சேர்க்கப்பட்டதற்கு முன்னாள் இந்திய கேப்டன் எம்.எஸ். தோனிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

உங்கள் தலைமைத்துவமும் விளையாட்டு பாணியும் மில்லியன் கணக்கான கிரிக்கெட் ரசிகர்களை ஊக்கப்படுத்தியுள்ளன.

உங்கள் சாதனைகள் கொண்டாட்டத்திற்கு மட்டுமல்ல, கிரிக்கெட்டில் பெரிய வெற்றியைப் பெற கனவு காணும் எளிய பின்னணியைச் சேர்ந்த எண்ணற்ற இளைஞர்களுக்கு நம்பிக்கையின் மூலமாகவும் உள்ளன.

இந்திய அணியின் வீரராகவும் கேப்டனாகவும் உங்கள் பயணம் மற்றும் ஐபிஎல் தொடரின் வரலாற்றில் என்றென்றும் பொறிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

The post ஐசிசி Hall of Fame-ல் இடம்பெற்ற எம்.எஸ். தோனிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,MS Dhoni ,ICC ,Chennai ,X ,MS… ,Deputy ,Chief Minister ,Dinakaran ,
× RELATED ஈரானில் சிக்கி தவிக்கும் தமிழக...