×

கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி

சென்னை: கீழடியில் ஒன்றுமே இல்லை என்றனர். பின்னர் ஆய்வதிகாரியை இடமாற்றினர். நிதியே ஒதுக்கமாட்டோம் என்றனர், கடைசியில் ஆய்வறிக்கையை 2 ஆண்டு கிடப்பில் போட்டனர் என கீழடி அகழாய்வு ஆய்வறிக்கையை நிராகரித்த ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது; ‘முதலில் அவர்கள் கீழடியில் ஒன்றுமே இல்லை என்றார்கள். அடுத்து ஆய்வதிகாரியை இடம் மாற்றினார்கள். அப்புறம் இனிமேல் நிதியே ஒதுக்க மாட்டோம் என்றார்கள். கடைசியாக, சமர்ப்பித்த அறிக்கையை இரண்டாண்டுகள் கிடப்பில் போட்டார்கள். இப்போது வந்து ஆதாரம் போதவில்லை என்கிறார்கள். அவர்களுக்கு ஒவ்வொரு முறையும் தமிழர்களின் வரலாற்றை நிராகரிப்பது பொதுவாக இருக்கிறது. கண்டுபிடிக்கும் காரணங்கள் தான் வேறு வேறாக இருக்கிறது.

5350 ஆண்டுகள் பழமையானவர்கள்; தொழில்நுட்பம் கொண்டவர்கள்; மூத்த நாகரிகம் படைத்த முதுமக்கள் என்றெல்லாம் உலக அறிவியல் ஆய்வுகள் ஒப்புக்கொண்டாலும், ஒரே நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசு ஒப்புக்கொள்வதில் ஏன் இத்தனை தயக்கம்? தமிழர்களை எப்போதும் இரண்டாந்தரக் குடிமக்களாக வைத்திருக்க வேண்டும் என்ற தணியாத தாகத்தாலா?

மறந்து விடாதீர்கள். வரலாறும், அது கூறும் உண்மையும் உங்களது மலிவான அரசியலுக்காகக் காத்திருக்காது. அவை மக்களுக்கானவை. மக்களிடமே சென்று சேரும்! பூனைக் கண்ணை மூடிக்கொண்டுவிட்டால் உலகம் இருண்டுவிடுமா என்ன?” என தெரிவித்துள்ளார்.

The post கீழடி ஆய்வு முடிவுகளை அங்கீகரிக்காதது ஏன்?: ஒன்றிய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி appeared first on Dinakaran.

Tags : Minister Gold South Rasu ,EU government ,Chennai ,Minister Gold South Rashu ,Minister of Gold ,Union ,Dinakaran ,
× RELATED 12 நாட்கள் தொடர்ந்த மோதல் முடிவுக்கு...