×

இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டம்

இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னையில் வணிக வளாகம் வழியாக செல்லும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக சென்னையில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்தில் 9 மாடி வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. இந்த புதிய ரயில் நிலையத்தின் வடிவமைப்பு திட்டத்தின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

சென்னையில் பெருநகர் மற்றும் புறநகரை இணைக்கும் வகையில் 2 ஆம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள நிலையங்களில் வணிக வளாகங்கள் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்டது. இதில் திருமங்கலம் மெட்ரோ ரயில் நிலையத்துடன் கூடிய 9 மாடி கட்டிடத்தின் மாதிரி படங்கள் வெளியாகியுள்ளது.

9 மாடிகளை கொண்ட 3 கட்டிடங்கள் கட்டப்படுகிறது. இந்த திட்டத்தின் மையமாக ஒருங்கிணைக்கப்பட்ட 2 மாடிகளை கொண்ட ரயில் நிலையம் அமைகிறது. வணிக கட்டிடங்களின் 4வது தளத்தில் மெட்ரோ ரயில் நிலையம், 5 மற்றும் 6வது தளத்தில் மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் சுமார் 6.85 லட்சம் சதுர அடியில் அமைக்கப்பட உள்ளது.

The post இந்தியாவில் முதல் முறையாக சென்னையில் வணிக வளாக கட்டடத்திற்கு உள்ளே சென்று வெளியில் வரும் வகையில் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க திட்டம் appeared first on Dinakaran.

Tags : India ,Chennai ,Metro Rail ,Thirumangalam Metro Railway Station ,Metro Rail Station ,
× RELATED முதல்வர் எழுதியுள்ள கடிதத்தை ஒன்றிய...