லியோவில் ஹாலிவுட் நடிகர்

சென்னை: விஜய் நடித்து வரும் ‘லியோ’ படத்தில் அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், சஞ்சய்தத் உள்பட பல பிரபலங்கள் நடித்து வருவதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘டெனண்ட்’ உள்பட பல ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகர் டென்சில் ஸ்மித் என்பவர் ’லியோ’ படத்தில் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் டென்சில் ஸ்மித், ‘லியோ’ படத்தின் 4 நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டதாகவும், தனது கேரக்டருக்கான காட்சிகளின் படப்பிடிப்பை முடித்து விட்டதாகவும் இந்த படத்தில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டரில் அவர் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. டென்சில் ஸ்மித் ‘டெனண்ட்’ உள்பட ஒரு சில ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் அவர் மும்பையை சேர்ந்தவர். ஏராளமான பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

The post லியோவில் ஹாலிவுட் நடிகர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: