×

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

லோகேஷ் களகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அதையடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68வது படத்தில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் ஜூன் 22 ஆம் தேதி விஜய்யின் 69வது பிறந்தநாள் என்பதால், அன்றையதினம் இந்த இரண்டு படங்கள் குறித்த அப்டேட்கள் வெளியாக இருப்பதாக விஜய் வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அதாவது விஜய் பிறந்தநாள் அன்று லியோ படத்தின் கிளிப்ம்ஸ் வீடியோ வெளியாக உள்ளது.

இந்த விடியோவுக்கு நடிகர் கமல்ஹாசன் பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். அதோடு விஜய் நடிக்கும் 68வது படத்தின் டைட்டில் போஸ்டரும் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு சி.எஸ்கே என்று டைட்டில் வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அது உண்மையா இல்லை, வேறு டைட்டில் வைக்கப்பட்டுள்ளதா? என்பது வரப்போகிற விஜய் பிறந்தநாள் அன்று தெரியவரும்.

The post விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vijay ,Lokesh Galakaraj ,Lord Venkat ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இஸ்லாமிய உறவுகள் அனைவருக்கும்...