×

நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நடிகர் நகுல்

நடிகர் மற்றும் பாடகரான நகுல் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு “நிற்க அதற்கு தக” என பெயரை சூட்டப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் நகுல் அறிமுகமானார்.

இதையடுத்து ‘ காதலில் விழுந்தேன்’ திரைப்படம் மூலம் ஹீரோவானார். பின்னர் மாசிலாமணி, வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், கந்தன்கோட்டை, நான் ராஜாவாக போகிறேன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். அண்ணல் அவை யாவரும் நகுலுக்கு பெரிதாக கைகொடுக்கவில்லை.

இதனால் கடந்த சில வருடங்கால நகுல் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் டி3 திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி இயக்கத்தில் நகுல் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு “நிற்க அதற்கு தக” பெயரிடப்பட்டுள்ளது.

முற்றிலும் சீரியஸான க்ரைம் த்ரில்லரான கதை களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தை ஏஜி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

The post நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறார் நடிகர் நகுல் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Nakul ,Shankar ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED மே 1ம் தேதி மறு ரிலீசாகிறது மங்காத்தா