×

மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் புதிய ட்ரைலர்!!

கவுதம் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் புதிய ட்ரைலர் அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவை பொறுத்தவரை கெட்டப் மாற்றுவது, புதிய புதிய கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது போன்ற முடிவுகளை சில நடிகர்கள் மட்டுமே எடுக்கின்றனர்.

அதில் ஒருவரான விக்ரம் பல காதாபாத்திரங்களாக, பல தோற்றங்களில் நடித்து அசதி வருகிறார். இவர் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் வெளியாகிய பொன்னியின் செல்வன் முதல் பாகம் மற்றும் இரண்டாம் பாகத்தில் மிகவும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தினார். மேலும்’தங்கலான்’ படத்தில் மிகவும் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் நடித்து வருகிறார்.

இந்நிலையில் கவுதம் மேனன், விக்ரம் கூட்டணியில் சில ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கப்பட்ட “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தடைபட்டது. தற்போது இத்திரைப்படம் ரிலீசுக்கு ரெடியாகி உள்ளது. இந்த படம் வரும் ஜூலை மாத இறுதியிலோ அல்லது ஆகஸ்ட் மாதத்திலோ திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டு உள்ளது.

இந்நிலையில் “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் புதிய ட்ரைலர் அப்டேட் வெளியாகி உள்ளது. இத்திரைப்படத்தின் ட்ரைலர் ஜூன் 17ம் தேதி மலேசியாவில் நடைபெறும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்-ன் இசை நிகழ்ச்சியில் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. கொஞ்ச காலமாக கவுதம் மேனன், ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் படம் வெளியாகாததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். தற்போது மீண்டும் அந்த கூட்டணியில் வெளியாகும் “துருவ நட்சத்திரம்” படத்திற்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

The post மலேசியாவில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ள “துருவ நட்சத்திரம்” திரைப்படத்தின் புதிய ட்ரைலர்!! appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Malaysia ,Vikram ,Gautam Manon ,Harris Jayaraj ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு...