×

நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு சென்சார் தயாரிக்க அதானி ஒப்பந்தம்

புதுடெல்லி: தொழிலதிபர் கவுதம் அதானி குழுமத்தை சேர்ந்த அதானி பாதுகாப்பு மற்றும் வான் பாதுகாப்பு நிறுவனம், இந்திய ராணுவத்திற்காக நீர்முழ்கி கப்பல் எதிர்ப்பு உபகரணங்களில் பயன்படுத்தப்படும் சென்சார் மற்றும் நேவிகேஷன் அமைப்புகளை தயாரிக்க அமெரிக்காவை சேர்ந்த ஸ்பார்டன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே, தாக்குதல் ஆயுதங்கள், ஸ்னைப்பர் துப்பாக்கிகள் மற்றும் இயந்திர துப்பாக்கிகளை தயாரிக்க அதானி குழுமம் இஸ்ரேல் வெபன் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

The post நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு சென்சார் தயாரிக்க அதானி ஒப்பந்தம் appeared first on Dinakaran.

Tags : Adani ,New Delhi ,Adani Defence and Air Defence ,Gautam Adani Group ,US ,Indian Army.… ,Dinakaran ,
× RELATED கண்ணியத்துடன் வாழ அனைவருக்கும் உரிமை...