×

கோரையாறு, உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது: நடைபாதையுடன் மழைநீர் வடிகால் 18 மாதங்களுக்குள் நிறைவு பெறும்

திருச்சி, மே 17: கோரையாறு, உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது. இதில் நடைபாதையுடன் மழைநீர் வடிகாலும் அமைக்கப்படுகிறது. 18 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிகுட்பட்ட குட்டிமலை ரோடு – வார்டு 57ல் கோரையாறு மற்றும் உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரை பகுதியில் புறவழிச்சாலை அமைக்கும் பணியை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கேஎன்.நேரு அடிக்கல் நாட்டி, பூமி பூஜை செய்து பணிகளை நேற்று தொடங்கி வைத்தார். இந்த பணிக்காக ரூ.81.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2கி.மீ தூரத்த்திற்கு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகளுக்காக ஏற்கனவே கடந்த ஆண்டு அக்.24ம் தேதி நிர்வாக அனுமதி பெறப்பட்டது. பின்னர் நவ.11ம் தேதி தொழில்நுட்ப அனுமதி பெறப்பட்டது.

இந்தாண்டு ஏப்.25ம் தேதி பணிகள் செய்வதற்கான அனுமதி பெறப்பட்ட நிலையில், மே.9ம் தேதி பணிகள் செய்வதற்கான தடையின்மை சான்று அளிக்கப்பட்டது. அதன்படி சாலை மொத்த நீளம் 2கி.மீ தூரம், இருவழிச் சாலைகளாக அமைய உள்ளது. சாலை அகலம் 10மீ, தரைமட்ட சாலை 0.990கி.மீ, உயர்மட்ட சாலை நீளம் 1.370மீ, ரயில்வே உயர்மட்ட சாலை 0.06409கி.மீ (இரட்டைமலை கோவில் / திருச்சி -திண்டுக்கல் வழி), இரட்டைமலை கோவில் செல்வதற்கான தனிசாலை – 200மீ, தாங்குசுவர் நீளம் – 2.250கி.மீ (சாலையின் இரு பகுதிகளிலும்)நடைபாதையுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைப்பு – 1.290கி.மீ அமைத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டப்பணிகள் 18 மாதங்களுக்குள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன் மற்றும் மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

* ரூ.81.72 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை 2கி.மீ தூரத்த்திற்கு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
* ஏப்.25ம் தேதி பணிகள் செய்வதற்கான அனுமதி பெறப்பட்ட நிலையில், மே.9ம் தேதி பணிகள் செய்வதற்கான தடையின்மை சான்று அளிக்கப்பட்டது.

The post கோரையாறு, உய்யகொண்டான் ஆறு கிழக்கு கரையில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியது: நடைபாதையுடன் மழைநீர் வடிகால் 18 மாதங்களுக்குள் நிறைவு பெறும் appeared first on Dinakaran.

Tags : Koraiyaru ,Uyyakondan ,Trichy ,Uyyakondan rivers ,Kuttimalai Road ,Ward 57 ,Trichy Corporation… ,Dinakaran ,
× RELATED உப்பிலியபுரம் அருகே பட்டுப்பூச்சி...