×

ஜப்பானை பின்னுக்கு தள்ளியது உலகின் 4வது பொருளாதார நாடாக உயருகிறது இந்தியா: ஐஎம்எப் கணிப்பு

புதுடெல்லி: சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எப்) இந்தாண்டு ஏப்ரல் மாதத்திற்கான சர்வதேச பொருளாதாரத்தை மதிப்பிட்டு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தாண்டு ஜப்பானை பின்னுக்கு தள்ளிவிட்டு உலகின் நான்காவது பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 4.187 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது, இது ஜப்பானின் 4.186 டிரில்லியன் டாலர்களை விட சற்று அதிகமாகும்.

மேலும், 2028ம் ஆண்டுக்குள் ஜெர்மனியை முந்திக் ெகாண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது, அப்போது இந்தியாவின் ஜிடிபி 5.58 டிரில்லியன் டாலர்களாகவும், ஜெர்மனியின் ஜிடிபி 5.25 டிரில்லியன் டாலர்களாகவும் இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 6.5% வளர்ச்சி கண்டுள்ளது.

இந்தாண்டும், அடுத்தாண்டும் 6.2% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இந்தியாவின் ஜிடிபி 4.187 டிரில்லியன் டாலர்களாகவும், ஜப்பானின் ஜிடிபி 4.186 டிரில்லியன் டாலர்களாகவும் இருக்கும். அதே 2027ல் இந்தியா 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என்றும் ‘மூடிஸ்’ நிறுவன மதிப்பீடு தெரிவிக்கிறது. வரும் 2027ல் 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாகவும், 2032ல் 10 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாகவும் இந்தியா மாறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

The post ஜப்பானை பின்னுக்கு தள்ளியது உலகின் 4வது பொருளாதார நாடாக உயருகிறது இந்தியா: ஐஎம்எப் கணிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Japan ,IMF ,New Delhi ,International Monetary Fund ,Dinakaran ,
× RELATED சபரிமலை தங்கம் திருட்டு...