×

கோவை வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை: கோவை சுங்கம் பகுதியில் சவுத் இந்தியன் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கு நேற்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அதிர்ச்சியடைந்த வங்கி கிளை மேலாளர், ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து வெடிகுண்டுகளை செயல் இழக்க வைக்கும் நிபுணர்கள் மற்றும் போலீசார் விரைந்தனர்.

அவர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி மூலமும், மோப்பநாய் உதவியுடனும் வங்கியில் அனைத்து பகுதிகளிலும் சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்றும், வெறும் புரளி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post கோவை வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Coimbatore Bank ,Coimbatore ,South Indian Bank ,Coimbatore Customs ,Racecourse ,Dinakaran ,
× RELATED வடசென்னை பகுதியைச் சேர்ந்த...