×

தொடர் விசாரணைக்கு பின் நடிகர் ஷைன் டோம் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதி

திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ. 3 கோடி மதிப்புள்ள உயர்ரக கலப்பின கஞ்சாவுடன் அண்மையில் தஸ்லீமா சுல்தான் என்ற இளம்பெண் கைதானார். இதுதொடர்பான விசாரணைக்கு நடிகர்கள் ஷைன் டோம் சாக்கோ, நாத் பாசி, மாடல் அழகி சவும்யாஆகியோர் ஆலப்புழை கலால் துறை அலுவலகத்தில் ஆஜரானார்.

3 பேரிடமும் 10 மணி நேரத்திற்கு மேல் நடந்த விசாரணைக்கு பின்னர் ஷைன் டோம் சாக்கோவை இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு கொண்டு சென்றனர். கலால்துறை கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post தொடர் விசாரணைக்கு பின் நடிகர் ஷைன் டோம் போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Shine Dom ,Thiruvananthapuram ,Kerala ,Taslima Sultan ,Shine Dom Shacko ,Nath Bassi ,Savumya Aagiyor ,Alappuzha Excise Department ,Dinakaran ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!