- அஇஅதிமுக
- எடப்பாடி
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- பாஜக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- சென்னை, ராயப்பேட்டை...
- அதிமுக மாவட்டம்
- தின மலர்

சென்னை: 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்களை தமிழக அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தொடங்கி விட்டன. சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் பூத் (பாகம்) கிளைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்து, மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், சட்டமன்றத் தொகுதி வாரியாக பூத் (பாகம்) கிளைகள் அமைக்கப்பட்டு வருவது குறித்த விவரங்களை எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். மேலும் இப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
The post சென்னையில் எடப்பாடி தலைமையில் அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.
