
சென்னை: தமிழ்நாட்டின் தொன்மை வரலாறு பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக நாகரிகம், பண்பாடு, கலாச்சாரம், தொன்மையின் சிறப்பு மற்றும் தொல்லியல் தலங்கள் குறித்த தகவல்களை மாணவர்களுக்கு சிறப்பாக கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு தொல்லியல் பயிற்சி 1000 அரசு பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு 6 நாட்கள் உண்டு உறைவிட பயிற்சியாக வழங்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு உள்கட்டமைப்பு வசதிகள் வரும் கல்வியாண்டில் 100% பள்ளிகளிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 654 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் ரூ.41.86 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளன. செட் தேர்வுக்கு பிறகு பேராசிரியர்களுக்கான போட்டித் தேர்வு நடத்தப்படும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கல்வியியல் கல்லூரிகளில் 4000 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது. மாநில தகுதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இதற்கான போட்டி தேர்வு நடத்தப்படும் என்று கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
The post தமிழ்நாட்டின் தொன்மை வரலாறு பற்றி மாணவர்களிடம் விழிப்புணர்வு: கொள்கை விளக்க குறிப்பில் தகவல் appeared first on Dinakaran.
