ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம்; பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு!

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம் மேற்கொள்ளவுள்ள நிலையில் பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாம்பன் பாலத்தை திறந்து வைத்த பிறகு பகல் 12.45 மணியளவில் பிரதமர் மோடி கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். கோயில் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டதால், பக்தர்கள் கோபுரத்தை வெளியே நின்று தரிசித்துச் செல்கின்றனர்.

 

The post ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் பிரதமர் மோடி இன்று தரிசனம்; பக்தர்களுக்கு நேரக்கட்டுப்பாடு! appeared first on Dinakaran.

Related Stories: