இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிவில் சப்ளை சிஐடி டிஜியாக இருந்த சீமா அகர்வால் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை டிஜிபியாகவும், சிவில் சப்ளை சிஐடி ஐஜியாக இருந்த ருபேஷ்குமார் மீனா கூடுதல் பொறுப்பாக சிவில் சப்ளை சிஐடி டிஜிபி பதவியை கவனிப்பார்.
இதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜயேந்திர எஸ்.பிதாரி சென்னை பெருநகர தலைமையிட கூடுதல் கமிஷனராகவும், சென்னை தலைமையிட கூடுதல் கமிஷனராக இருந்த கபில் குமார் சரத்கர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஐஜியாகவும், அந்த பதவியில் இருந்த கார்த்திகேயன் சென்னை பெருநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனராகவும்,
லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குநராக இருந்த சந்தோஷ்குமார் பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாகவும், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜியாக இருந்த சத்யபிரியா, காவலர் நலன் பிரிவு ஐஜியாகவும், காவலர் நலன் டிஐஜியாக இருந்த துரை காவல்துறை தலைமையிட டிஐஜியாகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவலர் நலன் டிஐஜி நிலையில் இருந்த பதவியை ஐஜி நிலையாக உயர்த்தி சத்யபிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
The post 8 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தீயணைப்புத்துறை டிஜிபியாக சீமா அகர்வால் நியமனம்: சென்னை போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கார்த்திகேயன் appeared first on Dinakaran.