×

ஒன்றிய அரசின் மசோதாவால் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு: கனிமொழி எம்.பி.

டெல்லி: ஒன்றிய அரசின் குடியுரிமை மற்றும் வெளிநாட்டினர் முறைப்படுத்துதல் மசோதாவால் தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு பெரும் பாதிப்பு என மக்களவையில் திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து வந்த தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். சொந்த நாட்டுக்கு செல்ல முடியாத நிலையில் இந்தியாவில் தங்கியுள்ளவர்களை சட்டவிரோத குடியேறிகளாக கருதக் கூடாது. இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள இலங்கைத் தமிழர்களின் நலனை காக்கும் வகையில் தேவையான திருத்தங்களை மசோதாவில் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

The post ஒன்றிய அரசின் மசோதாவால் இலங்கை தமிழர்களுக்கு பாதிப்பு: கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Union government ,Kanimozhi ,Delhi ,Tamil Nadu ,DMK ,Group ,Kanimozhi MP ,Lok Sabha ,Sri Lanka ,
× RELATED புதுச்சேரி திமுக முன்னாள் முதல்வர்...