×

தனுஷ் படத்தை இயக்கும் மரகத நாணயம் இயக்குனர்?

ஆதி நடித்த மரகத நாணயம் என்ற படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.கே. சரவணன். இவர் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடிப்பில் வீரன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். அவருடன் வினய் ராய், ஆதிரா ராஜ், முனீஸ்காந்த் உட்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வெளியானது. வருகிற ஜூன் இரண்டாம் தேதி இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அடுத்தபடியாக தனுஷ் நடிக்கும் படத்தை இயக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவித்திருக்கிறார் ஏஆர்கே சரவணன். அது குறித்து அவர் கூறுகையில், நான் இயக்கிய மரகத நாணயம் படத்தை பார்த்துவிட்டு என்னை பாராட்டிய தனுஷ் தனக்கும் ஒரு கதை தயார் பண்ணுமாறு அப்போதே கூறியிருந்தார். வீரன் படம் திரைக்கு வந்ததும் தனுஷை சந்தித்து சில கதைகளை அவரிடத்தில் சொல்லி அதில் அவருக்கு பிடித்தமான கதையை தேர்வு செய்து அந்த படத்தை இயக்குவேன் என்கிறார்.

The post தனுஷ் படத்தை இயக்கும் மரகத நாணயம் இயக்குனர்? appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Dhanush ,Maragatha Nayanam ,Adi. Saravanan ,Adi ,Vinay Roy ,Adira Raj ,Muneeskanth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED தனுஷ் தனது மகன் என வழக்கு தொடர்ந்தவர் மரணம்