×

ஐபிஎல் 4வது லீக் போட்டி டெல்லி அசாத்திய வெற்றி: அசுதோஷ் சர்மா விஸ்வரூபம்

விசாகப்பட்டின: ஐபிஎல் 4வது லீக் போட்டியில் நேற்று டெல்லி அணி லக்னோவை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 18வது சீசன் தொடரின் 4வது லீக் போட்டி, விசாகப்பட்டினத்தில் நேற்று, லக்னோ – டெல்லி அணிகள் இடையே நடந்தது. முதலில் களமிறங்கிய லக்னோ அணி துவக்க வீரர்கள், துவக்கம் முதல் அடித்து ஆட ஆரம்பித்தனர். 5வது ஓவரில் முதல் விக்கெட்டாக அய்டன் மார்க்ரம் 15 ரன்னில் அவுட்டானார். பின் வந்த நிகோலஸ் பூரன், மற்றொரு துவக்க வீரர் மிட்செல் மார்ஷ் உடன் சேர்ந்து டெல்லி பவுலர்களின் பந்துகளை துவம்சம் செய்து ரன் வேட்டையாடினார்.

இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 87 ரன் சேர்த்திருந்த நிலையில், மார்ஷ் (72 ரன், 6 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டானார். பின், கேப்டன் ரிஷப் பண்ட் களமிறங்கினார். 13வது ஓவரை சந்தித்த பூரன், விஸ்வரூபம் எடுத்து ரன் குவிப்பில் ஈடுபட்டார். அவர், 30 பந்தில் 75 (7 சிக்சர், 6 பவுண்டரி) ரன் எடுத்து அவுட்டானார். பின் வந்த வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர் முடிவில் லக்னோ, 8 விக்கெட் இழப்புக்கு 209 ரன் எடுத்திருந்தது. அதையடுத்து, 210 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. துவக்கத்தில் ஆடிய வீரர்கள் சொதப்பியதால் 113 ரன்னுக்குள் 6 விக்கெட் சரிந்தது. இருப்பினும் அசுதோஷ் சர்மாவும், விப்ரஜ் நிகாமும் அபாரமாக ஆடி ரன்களை குவித்தனர். அதனால் 19.3 ஒவரில் 9 விக்கெட் இழப்புக்கு 211 ரன் குவித்து டெல்லி அசாத்திய வெற்றி பெற்றது. அசுதோஷ் 31 பந்துகளில் 66 ரன் எடுத்து அவுட் ஆகாமல், அணியை வெற்றி பெறச் செய்தார்.

The post ஐபிஎல் 4வது லீக் போட்டி டெல்லி அசாத்திய வெற்றி: அசுதோஷ் சர்மா விஸ்வரூபம் appeared first on Dinakaran.

Tags : IPL 4th League Match ,Delhi Azathya ,Asudosh Sharma ,Viswaroopam ,Visakhapat ,Delhi ,Lucknow ,4th league match ,IPL ,league match ,IPL 18th season ,Visakhapatnam ,Delhi Ashathya ,Dinakaran ,
× RELATED மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல்...