×

திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலிருந்து விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்த விமானத்திற்க்கு வரும் பயணிகள் அனைவரும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த பிறகே வெளியே அனுப்புவது வழக்கம்.

கடந்த சில நாட்களாக விமான நிலையத்தில் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. மேலும் போதைப்பொருள் மற்றும் உயிரினங்கள் கூட கடத்தி வருவது கடந்த சில சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று காலை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது பயணி ஒருவரின் உடைமையில் ரூ.5 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா போன்ற போதைப்பொருள் வைத்திருப்பது கண்டறியப்பட்டது.

உடனடியாக போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த பயணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post திருச்சி விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Trichy airport ,Trichy ,Trichchi International Airport ,Dubai ,Sri Lanka ,Singapore ,Malaysia ,Dinakaran ,
× RELATED அதிமுக-பாஜ கூட்டணி தமிழ்நாட்டுக்கு நல்லதல்ல: துரை வைகோ பேட்டி