×

விதை பரிசோதனை மையத்தில் உபகரணங்கள் திருட்டு

 

கோவை, மார்ச் 24: கோவை தடாகம் ரோட்டில் வேளாண்மை பல்கலைகழகத்தின் விதை பரிசோதனை மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு விதை பரிசோதனை அதிகாரியாக நர்கீஸ் (51) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் பரிசோதனை மையத்தில் உள்ள கிடங்கில் கடந்த 2007ம் ஆண்டு முதல் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள விதை பரிசோதனை உபகரணங்கள் வைக்கப்பட்டு பூட்டி வைக்கப்பட்டு இருந்தது.

அதனை சரி பார்ப்பதற்காக நர்கீஸ் கிடங்கை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கிருந்த உபகரணங்கள் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து நர்கீஸ் சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விதை பரிசோதனை மையத்தில் உபகரணங்கள் திருட்டு appeared first on Dinakaran.

Tags : seed testing center ,Coimbatore ,Agricultural University ,Thadakam Road, Coimbatore ,Nargis ,Dinakaran ,
× RELATED அதிமுகவை மிரட்டி பாஜ பணிய வைத்திருக்கிறது: திருமாவளவன் குற்றச்சாட்டு