×

தலித்துகள் மீது வன்முறை கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பூர், மார்ச் 23: வியாசர்பாடி அம்பேத்கர் கலை கல்லூரி எதிரே தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க வடசென்னை மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீரபாண்டியன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் வன்முறை தாக்குதலை தடுத்து நிறுத்த வேண்டும், தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்னிறுத்தப்பட்டன.

The post தலித்துகள் மீது வன்முறை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Dalits ,Perambur ,Vyasarpadi Ambedkar Arts College ,Tamil Nadu Oppressed ,People's Right to Life Movement ,Tamil Nadu ,Oppressed People's Right to Life Movement… ,Dinakaran ,
× RELATED சொத்து பிரச்னையில் நாயை ஏவி அண்ணனை...