×

வளர்ச்சி திட்ட பணிகளை ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு

திருச்செங்கோடு, மார்ச் 23: திருச்செங்கோடு பகுதியில் நடந்து வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை, ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு செய்தார். திருச்செங்கோடு ஒன்றியம், ஏமப்பள்ளி ஊராட்சி விட்டம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் அமைக்கும் இடத்தை, ஈஸ்வரன் எம்எல்ஏ பார்வையிட்டார். திருச்செங்கோடு ஒன்றியம், ஏமப்பள்ளி ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில், கட்டிய வணிக வளாகத்தினை ஆய்வு செய்து, முதல்வர் மருந்தகத்தை பார்வையிட்டார். கூட்டப்பள்ளி ஏரியை ₹7 கோடி செலவில் தூய்மைப்படுத்தி, நடைபாதை மற்றும் பூங்காக்கள் அமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக அதிகாரிகளுடன் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினார்.

கூட்டப்பள்ளி பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்தார். பின்னர், நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கட்டப்படும் புதிய வகுப்பறை கட்டிட பணி, வணிக வளாகம் கட்டும் பணி மற்றும் மல்லசமுத்திரம் ஒன்றியம், பீமரபட்டியில் கிராம அறிவுசார் மையம் கட்டும் பணியினை அதிகாரிகளுடன் பார்வையிட்டார். ஆய்வின் போது, நகர திமுக செயலாளர் கார்த்திகேயன், நகராட்சி கமிஷனர் அருள், பொறியாளர் சரவணன், நகர்மன்ற உறுப்பினர் சண்முக வடிவு, கொமதேக மேற்கு மாவட்ட செயலாளர் ராயல் செந்தில், சேன்யோகுமார், நந்தகுமார் மற்றும் அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

The post வளர்ச்சி திட்ட பணிகளை ஈஸ்வரன் எம்எல்ஏ ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Easwaran MLA ,Thiruchengode ,Vithmapalayam ,Thiruchengode Union ,Emappally Panchayat ,Union ,Emappally… ,Dinakaran ,
× RELATED மஞ்சள் நிற ஒட்டு பொறி செயல்விளக்கம்