×

திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம்

பரமத்திவேலூர், மார்ச் 23: பரமத்திவேலூர் சட்டமன்ற தொகுதி திமுக இளைஞர் அணி சார்பில், ஒன்றிய அரசை கண்டித்து பாண்டமங்கலம் கடைவீதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பாண்டமங்கலம் பேரூராட்சி துணைத் தலைவர் முருகவேல் தலைமை வகித்தார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பாலாஜி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் சண்முகம், தனராசு, சண்முகம், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கே.எஸ்.மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் நாஞ்சில்.சம்பத், இளம் பேச்சாளர் பாவை.பூர்ணிமா, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன் ஆகியோர், ஒன்றிய அரசை கண்டித்து பேசினர். இதில் மாவட்ட, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள், கலந்து கொண்டனர். மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார்.

The post திமுக இளைஞரணி சார்பில் பொதுக்கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK Youth Wing ,Paramathivellur ,Pandamangalam Market ,Paramathivellur Assembly Constituency ,Union Government ,Murugavel ,Vice President ,Pandamangalam Town Panchayat ,Wing ,Balaji ,Dinakaran ,
× RELATED வார்டு நிர்வாகிகளுக்கான விண்ணப்ப படிவங்கள்