×

விமலா ராமன் நடிக்கும் ‘அஸ்வின்ஸ்’

டாக்டராகப் பணியாற்றிவிட்டு, பிறகு சினிமாவில் நடிக்க வந்தவர் வசந்த் ரவி. திரைக்கு வந்த ‘தரமணி’, ‘ராக்கி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்த அவர், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இதையடுத்து அவர் நடித்து முடித்துள்ள படம், ‘அஸ்வின்ஸ்’. முக்கிய வேடங்களில் விமலா ராமன், ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ முரளிதரன், ராஜீவ் மேனன் மகள் சரஸ் மேனன், மலினா, ‘நிலா காலம்’ படத்துக்காக தேசிய விருது பெற்ற நடிகர் உதய்தீப் நடித்துள்ளனர்.

சூப்பர் நேச்சுரல் திரில்லர் படமான இதற்கு விஜய் சித்தார்த் இசை அமைக்க, எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். வெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பி.வி.எஸ்.என்.பிரசாத் தயாரிக்க, பாபிநீடு.பி வழங்குகிறார். பிரவீன் டேனியல் இணைந்து தயாரிக்க, தருண் தேஜா இயக்கியுள்ளார். இப்படத்தை வரும் ஜூன் 9ம் தேதி சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் வெளியிடுகிறார்.

The post விமலா ராமன் நடிக்கும் ‘அஸ்வின்ஸ்’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Vimala Raman ,Vasanth Ravi ,Rajinikanth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...