தேவையானவை:
கோதுமை மாவு – 2 கப்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
ஓமம் ½ ஸ்பூன்,
உப்பு – தேவைக்கு ஏற்ப.
தேங்காய் பொடிக்கு தேவையானவை:
தேங்காய்த் துருவல் – 1 கப்,
வரமிளகாய் – 4,
உப்பு – தேவைக்கு,
பெருங்காயம் – ¼ டீஸ்பூன்,
உளுந்து – 3 டீஸ்பூள்,
எண்ணெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
வாணலியில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், உளுந்து, பெருங்காயம் சேர்த்து வறுக்கவும். அதில் உப்பு சேர்த்து கரகரப்பாகப் பொடிக்கவும். அதே வாணலியில் தேங்காயைச் சிவக்க வறுத்து மிக்ஸியில் பொடித்து உளுந்து பொடியினையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். கோதுமை மாவுடன் உப்பு, 1 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்துப் பிசைந்து அரைமணி நேரம் ஊறவிடவும். சப்பாத்திகளாக இட்டு அதன் மேலே 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, 2 டீஸ்பூன் தேங்காய்ப் பொடியை தூவி முக்கோணமாக மடித்து சப்பாத்திகளாக திரட்டி தோசைக்கல்லில் சப்பாத்தியை போட்டு எடுக்கவும்.
The post ஸ்டஃப்டு சப்பாத்தி appeared first on Dinakaran.
