கேன்ஸ் பட விழாவில் சன்னி லியோன் கண்ணீர்

 

சன்னி லியோன் மற்றும் ராகுல் பட் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தி படம் ‘கென்னடி’. அனுராக் கஷ்யப் இயக்கியுள்ளார். கேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு திரையிடப்பட்டது. இயக்குனர் அனுராக் காஷ்யப் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், அந்த நிகழ்ச்சியின் தொகுப்பை வெளியிட்டிருந்தார். அதில் சன்னி லியோன் மற்றும் ராகுல் பட் ஆகியோரும் வீடியோவில் காணப்படுகின்றனர். படத்திற்கு 7 நிமிடம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகின்றனர்.

இந்தத் திரைப்படம் தூக்கமின்மையால் பாதிக்கப்பட்ட ஒரு முன்னாள் காவலரைப் பற்றிய கதையாக உருவாகியுள்ளது. நீண்ட காலமாக இறந்துவிட்டதாகக் கருதப்பட்ட அவர், பின்னால் இருந்து ஊழல் சூழ்ந்த அமைப்பை சரிசெய்யும் வேலையில் இறங்குகிறார். இந்த படத்துக்கு கேன்ஸ் பட விழாவில் பார்வையாளர்களிடமிருந்து மிகுந்த வரவேற்பு கிடைத்தது அதைப் பார்த்து சன்னி லியோன் கண் கலங்குகிறார். பிறகு அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறார். இந்த காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.

The post கேன்ஸ் பட விழாவில் சன்னி லியோன் கண்ணீர் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: