- அமைச்சர்
- கீதாஜீவன்
- சென்னை
- ஹண்ட்சனரப்பு மாவட்டம்
- கீல்வேலூர் மாவட்டம்
- நாகை மாலி
- அமைச்சர் கீடா ஜீவன்
- தின மலர்
சென்னை : மாற்றுத் திறனாளி உரிமைத் தொகை பெற்றாலும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை தரப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். கீழ்வேளூர் தொகுதியில், வேட்டைக்காரனிருப்பு பகுதியில் குழந்தைகள் மையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என நாகை மாலி கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் கீதா ஜீவன் அளித்துள்ள பதிலில், “இந்தாண்டு 500 குழந்தைகள் மையங்களுக்கு கட்டிடம் கட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். குழந்தை நல மையங்களை சீர்மிகு மையங்களாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த ஆண்டு, அனுமதி அளிக்கப்பட்ட 1,503 மையங்களில் 1,203 மையங்களுக்கு கட்டிடம் கட்டப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.
The post மாற்றுத் திறனாளி உரிமைத் தொகை பெற்றாலும், குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உரிமைத் தொகை தரப்படும் :அமைச்சர் கீதா ஜீவன் appeared first on Dinakaran.
