×

பெட்ரோல், டீசல் மூலம் ரூ.36 லட்சம் கோடி கொள்ளை: கார்கே குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்படவில்லை. மோடி அரசு பொதுமக்களை அச்சமின்றி கொள்ளையடிக்கிறது. மோடி ஜி தனது மன் கி பாத்’ நிகழ்ச்சியை நீண்ட ஒருதலைப்பட்ச பாட்காஸ்ட்கள் மூலம் மட்டுமே பொதுமக்களிடம் கூறுகிறார்.

மேலும் பணவீக்கம் காரணமாக பிரதமர் மக்களை கண்ணீர் விடச் செய்கிறார். கச்சா எண்ணெய் விலைகள் 42 மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் இருக்கிறது. மோடி அரசு மக்களை கொள்ளையடிக்கிறது. கச்சா எண்ணெய் விலை 2014 முதல் 34 சதவீதம் குறைந்துள்ளது. 10 ஆண்டுகளில் ரூ.36 லட்சம் கோடி வரி வசூல் நடந்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை எப்போது குறைக்கப்படும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

The post பெட்ரோல், டீசல் மூலம் ரூ.36 லட்சம் கோடி கொள்ளை: கார்கே குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Kharge ,New Delhi ,Congress ,Mallikarjun Kharge ,Modi government ,Modi ji ,Dinakaran ,
× RELATED விண்வெளியில் இந்தியாவின் புதிய பாய்ச்சல்: நாளை விண்ணில் பாய்கிறது PSLV-C62!