×

தொகுதி மறுசீரமைப்பு – ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு

டெல்லி: டெல்லியில் தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியுடன் தமிழ்நாடு அரசு குழு சந்தித்து பேசி வருகிறது. ரேவந்த் ரெட்டியை அமைச்சர் கே.என்.நேரு, என்.ஆர்.இளங்கோ எம்.பி. ஆகியோர் சந்தித்தனர். தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக தெலுங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டியை திமுக குழு சந்தித்து பேசியது. சென்னையில் மார்ச் 22ல் நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு அரசு குழுவினர் அழைப்பு விடுத்தனர் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை ரேவந்த் ரெட்டியிடம் வழங்கினர்.

The post தொகுதி மறுசீரமைப்பு – ரேவந்த் ரெட்டிக்கு அழைப்பு appeared first on Dinakaran.

Tags : Revenant ,Delhi ,Tamil Nadu Government Committee ,Telangana ,Chief Minister ,Revand Reddy ,Revant ,Minister ,K. N. Nehru ,N. R. Little M. B. ,Revenant Reddy ,
× RELATED நீதிபதி வர்மாவுக்கு பணிகள் ஒதுக்குவது நிறுத்தம்..!!