இது நான்-லீனியர் வகை படம்: கூறுகிறார் “பாய் – ஸ்லீப்பர் செல்ஸ்” படத்தின் இயக்குனர் கமலநாதன்

கே.ஆர்.எஸ் பிலிம்டாம் சார்பில் கிருஷ்ணராஜ், ஸ்ரீநியா, ஆதவா ஈஸ்வரா தயாரித்துள்ள படம், ‘பாய் – ஸ்லீப்பர் செல்ஸ்’. கிருஷ்ணமூர்த்தி ஒளிப்பதிவு செய்ய, ஜித்தின் கே.ரோஷன் இசை அமைத்துள்ளார். கமலநாதன் புவன் குமார் எழுதி இயக்கியுள்ளார். பி.வி.ஆர் பிக்சர்ஸ் வெளியிடுகிறது. படம் குறித்து கமலநாதன் புவன் குமார் கூறுகையில், ‘இது நான்-லீனியர் வகை படம்.

முற்பகுதி கேள்விகளாகவும், பிற்பகுதி அதற்குரிய பதில்களாகவும் இருக்கும். மனித வாழ்க்கையில் மதங்களை விட, மனிதாபிமானம் மட்டுமே முக்கியமானது என்ற கருத்தை வலியுறுத்தும் இதில் ஆதவா ஈஸ்வரா, நிகிஷா, தீரஜ் கேர் நடித்துள்ளனர். சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில், வரும் ஜூன் மாதம் படம் திரைக்கு வருகிறது’ என்றார்.

The post இது நான்-லீனியர் வகை படம்: கூறுகிறார் “பாய் – ஸ்லீப்பர் செல்ஸ்” படத்தின் இயக்குனர் கமலநாதன் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: