×

டிஜிட்டலில் வருகிறது ‘வேட்டையாடு விளையாடு’

கடந்த 2006 ஆகஸ்ட் 25ம் தேதி கவுதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன், ஜோதிகா, பிரகாஷ்ராஜ், கமலினி முகர்ஜி, டேனியல் பாலாஜி, ஜானகி சபேஷ், முமைத்கான், விடிவி கணேஷ் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்த படம், ‘வேட்டையாடு விளையாடு’. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்தார். செவன்த் சேனல் கம்யூனிகேஷன்ஸ் சார்பில் மாணிக்கம் நாராயணன் தயாரித்தார்.

இப்படத்தின் 2ம் பாகம் எப்போது என்று ரசிகர்கள் கேட்டு வரும் நிலையில், இப்படத்தை பிலிம் விஷன் கே.ராமு டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்துள்ளார். வரும் ஜூன் மாதம் ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ், கே.எம்.சுந்தரம் பிக்சர்ஸ் மீனாட்சி சுந்தரம் இப்படத்தை திரைக்கு கொண்டு வருகின்றனர்.

The post டிஜிட்டலில் வருகிறது ‘வேட்டையாடு விளையாடு’ appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Kamalhasan ,Jhodika ,Prakashraj ,Kamalini Mukherjie ,Daniel Balaji ,Janaki Sabesh ,Mumaitkhan ,VTV Ganesh ,Gautam Manon ,Raviverman ,Cinematorection ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED நடிகர் சரத்பாபு மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்