×

ஏலியன்ஸ் 2042 – திரை விமர்சனம்

ஜேம்ஸ் கேமரான் இயக்கத்தில் ‘ஏலியன்ஸ் (1986) இப்போது வரை மிரட்டும் வரிசையில் இருந்துவர இந்த வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை அல்லது வேற்றுகிரக ஜந்துக்கள் பூமியில் செய்யும் அட்டகாசம் என இன்றுவரை கிளாசிக் கான்செப்ட்டாக மாஸ் காட்டி வருகின்றன ஆனால், இன்றும் இதோ அந்த வரிசையில் இப்போது சீன நாட்டு ஏலியன் படமாக ‘ஏலியன்ஸ் 2042’ படம். 777 பிக்சர்ஸ் மூலம் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் & இந்தி என 6 மொழிகளில் வெளியிடப்படும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் ஹுவாங் ஸுவாஸெங்.

படத்தின் கதை 2042 எதிர்காலத்தில் நடக்கிறது. பூமியின், நீர் ஆதாரங்களை திருடும் நோக்கில், ஏலியன்கள் உலகின் அனைத்து முக்கிய நகரங்கள் மீதும் தாக்குதலை நடத்துகிறார்கள். ஏலியன்களுக்கு எதிராக போராட உலக நாடுகள் ஒன்றுகூடுகிறார்கள். மற்ற அனைத்து இராணுவப் படைகளும் ஏலியன்களுடன் மோதி தோற்கடிக்கப்பட்ட பிறகு, கடைசியாக இறங்கும் சீன இராணுவமும் தோற்கடிக்கப்படுகிறது. அதில் தப்பிப்பிழைத்தவர்களில் சில சீன இராணுவத்தினர் தொடர்ந்து போராட்டமும், தாக்குதல்களுமாக முன்னேறி ஏலியன்களின் தலைமை இடத்தை அடைகிறார்கள். அங்கே ஏலியன்களுக்கும், இவர்களுக்கும் தாக்குதல்கள் நடக்க முடிவு என்ன என்பது மீதிக் கதை.

பொதுவாகவே ஹாலிவுட் படங்களைக் காட்டிலும் ஆசியப் படங்களில் குடும்பம், காதல், உறவு, என பலவாறு கட்டமைப்பைச் சேர்த்தேக் கதை சொல்வதுண்டு. அப்படித்தான் எத்தனையோ ஸோம்பிகள் படமிருக்க உலகளவில் ஹிட்டானது ‘டிரெய்ன் டு புசன்’ கொரியன் ஸோம்பி படம். அதே பாணியில் சீனர்கள் அடுத்து கிளாசிக் கான்செப்ட்டான ஏலியன்களைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

படத்தின் மேக்கிங், தாக்குதல்கள் என எதிலும் சோடை சொல்லமுடியவில்லை. ஆனால் கதைக்கும், சுவாரஸ்யமான காட்சிகளுக்கும் இன்னும் சற்று மெனெக்கெட்டிருக்கலாம். நிறைய இடங்களில் துப்பாக்கியுடன் ஒரு குழு பாலைவனத்தில் நடந்துகொண்டே இருப்பது ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டாக்குகிறது. சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டே இருக்க ஏலியன் இறக்காமல் இருப்பதும், மீண்டும் மீண்டும் துப்பாக்கிகள் குண்டுகள் தீர அடித்துக்கொண்டே இருப்பதும் போது சார் என்னும் மனநிலையக் கொடுக்கிறது.

குகைக்குள் மறைந்து வாழும் மக்கள், கமாண்டர் டியான்யே ரென் நடிப்பும், ஸாங் ஸிலுவின் அப்பாவித்தனமான முகமும் படத்தின் பளிஸ் தருணங்கள். மேலும் சில இடங்களில் ஏலியனுக்கும் சீன இராணுவப் படைக்குமான சேஸிங் காட்சிகள் அருமை. இன்னும் என்னவோ குறைகிறது எனத் தோன்ற வைக்கிறது இந்த ‘ஏலியன் 2042’ படம் .

The post ஏலியன்ஸ் 2042 – திரை விமர்சனம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : James Cameron ,earth ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED இந்தியர்களின் உடல்நலத்தை கெடுத்து...