×

விஜய்க்கு ஜப்பானில் விருது

டோக்கியோ: சமீபத்தில் ஜப்பானில் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட திருவிழா 2021 நடைபெற்றது. இந்த சர்வதேச திரைப்பட திருவிழா அந்த வருடத்தின் சிறந்த படங்களை வகைப்படுத்தி தேர்வு செய்தது. மாஸ்டர் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான விருது விஜய்க்கு வழங்கப்பட்டது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படம் 2021 பொங்கல் பண்டிகைக்கு வெளியானது. இந்த படத்தில் மேலும் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா மற்றும் கவுரி கிஷன் ஆகியோரும் நடித்திருந்தனர். மாஸ்டர் படம் மொத்தம் மூன்று விருதுகளை வென்றுள்ளது. ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு சிறந்த நடன வடிவமைப்புக்கான விருதை தினேஷ்குமாரும் சிறந்த வில்லன் நடிகருக்கான விருதை விஜய்சேதுபதியும் வென்றனர்.

The post விஜய்க்கு ஜப்பானில் விருது appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Tags : Japan ,Vijay ,Tokyo ,Osaka Tamil International Film Festival 2021 ,Kollywood News ,Kollywood Images ,
× RELATED ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவு!