மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யபப்டும் என சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மார்ச் 14ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. மார்ச் 14 காலை 9.30 மணிக்கு 2025-26 நிதிநிலை அறிக்கையை நிதிஅமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

மார்ச் 15-ம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும், பேரவை விதி 193/1-இன் கீழ் 2025 -2026-ஆம் ஆண்டுக்கான முன்பண மானியக் கோரிக்கைகள், பேரவை விதி 189/1-இன் கீழ் 2024-2025-ஆம் ஆண்டுக்கான கூடுதல் செலவினங்களுக்கான மானியக் கோரிக்கையினையும் மார்ச் 21, 2025 அன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும். சட்டசபை கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அப்பாவு தெரிவித்தார்.

பட்ஜெட்டில் மக்கள் நலன் சார்ந்த புதிய அறிவிப்புகள், மக்களால் ஏகோபித்த ஆதரவுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட திட்டங்களின் விரிவாக்கம் போன்ற அம்சங்கள் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

 

The post மார்ச் 14ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல்: சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: