சென்னை: இந்தியை கட்டாயம் படிக்க எந்த தேவையும் இல்லை; இந்தி படித்தால் பசி, பட்டினி தீருமா? என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியா ஒருமைப்பாடு மிக்க நாடாக வேண்டும் எனில் எல்லா மொழிகளுக்கும் இடமளிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.