சென்னை : 5,376 டன் செம்மரக்கட்டைகளை பகுதிவாரியாக சர்வதேச அளவிலான ஈ ஏலம் மூலம் விற்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செம்மரங்களை ஏலம் விட வனத்துறை முடிவு எடுத்துள்ளது. முதற்கட்டமாக 905.67 டன் செம்மரக்கட்டைகள் மார்ச் 6,13,20 தேதிகளில் ஏலம் விட முடிவு எட்டப்பட்டுள்ளது.