×

பிப்ரவரி 21ம்தேதி தோகைமலை பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம்

 

கரூர், பிப். 18: தோகைமலை பகுதியில் பிப்ரவரி 21ம்தேதி மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.கரூர் மாவட்ட கலெக்டர் தங்கவேல் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு முதல்வரால் அறிவிக்கப்பட்டுள்ள மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தின் கீழ் கரூர் மாவட்டத்தில் ஊரகப்பகுதிகளில் 8 வட்டாரங்களில் 40 இடங்களில் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில், 15 துறைகள் சார்ந்த 44 சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், பிப்ரவரி 21ம்தேதி அன்று தோகைமலை வட்டாரத்தில் நெய்தலூர் கிராம ஊராட்சிக்குட்பட்ட அரசு ஆதி திராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், வடசேரி கிராம ஊராட்சியில் காவல்காரன்பட்டி சமூதாயக் கூடத்திலும், பொருந்தலூர் கிராம ஊராட்சி பொருந்தலூர் அரசு ஆதி திராவிடர் நடுநிலைப் பள்ளியிலும், கழுகூர் கிராம ஊராட்சி கழுகூர் அரசு ஆதி திராவிடர் தொடக்கப்பள்ளியிலும், புத்து£ர் கிராம ஊராட்சி சின்னப்புதூர் ஊராட்சி தொடக்கப் பள்ளியிலும் மக்களுடன் முதல்வர் முகாம் நடைபெறவுள்ளது.
மேலும், இந்த சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் தங்களது பகுதிக்கு ஒதுக்கப்பட்ட நாட்களில் குறிப்பிட்ட இடங்களில் கோரிக்கை தொடர்பாக மனு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post பிப்ரவரி 21ம்தேதி தோகைமலை பகுதியில் மக்களுடன் முதல்வர் முகாம் appeared first on Dinakaran.

Tags : Dogaimalai ,Karur ,Pip ,Dokaimalai ,District ,Collector ,Tangvel ,Tamil ,Nadu ,Chief Minister ,Tamil Nadu ,
× RELATED சாலையோரங்கள், வேளாண் நிலங்களில் மது...